Book for February 2025

புத்தகம் பற்றி
பா. ராகவன் அவர்கள் எழுதி, தினகரன் நாளிதழில் தொடராக வந்து பின்பு 24 கேரட் என்ற தலைப்பில் புத்தகமாக வந்த கட்டுரைகளின் தொகுப்பு.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் எத்தனை திறமையாக, எத்தனை அமைதியாக, எத்தனை சாதுர்யமாகப் பெண்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களால் முடியாத எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று வியப்பு ஏற்படுவது நிச்சயம்.
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமையம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, ரொம்ப காலத்துக்கு கருதப்பட்டு வந்திருக்கிறது.
அதே சமயம் உலகில் தோன்றிய ஒரு பெண்மணி தான் முதல் பகுத்தறிவுவாதியாகவும் இருந்திருக்கிறாள். ஆண் இல்லை! சந்தேகமாக இருக்கிறதா? உள்ளே விரிவாகப் பார்க்கலாம்.
தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக்கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள்.
- ஏவாள்
- ஆண்டாள்
- மர்லின் மன்ரோ
- அன்னா தாஸ்தயேவ்ஸ்கி
- இந்திராகாந்தி
- நதீன் கோர்டிமர்
- மார்டினா நவ்ரத்திலோவா
- ஐஸ்வர்யா ராய்
- க்ளியோபாட்ரா
- பேனசிர் புட்டோ
- இசபெல் அலண்டே
- ஹிலாரி க்ளிண்டன்
- சோனியா காந்தி
- ஸ்ரீ அன்னை
- சாரதாதேவி
- மடோனா
- ஜோன் ஆஃப் ஆர்க்
- டயானா
- அயன்ராண்ட்
- அருந்ததி ராய்
- கல்பனா சாவ்லா
- சரோஜினி நாயுடு
- அமிர்தானந்தமயி
- அன்னை தெரஸா
Available in
கலந்துரையாடல்

Host:
Prakash
Date & Time:
February 22, 2025, 4 PM
Location:
Online (Google Meet)
கலந்துரையாடல் புள்ளிகள் (for inspiration)
- புத்தகம் பற்றி தங்களின் பொதுவான கருத்து
- மொழி நடை, கள கட்டமைப்பு, எண்ண ஓட்டம்
- தங்களின் மனம் கவர்ந்த நபர் யார்?
- எவர் பற்றி முதன் முறையாக அறிந்து கொண்டீர்?
- தாங்கள் ஆமோதிக்கும் அல்லது ஏற்க மறுக்கும் புள்ளிகள் ஏதும் உண்டா?
- இந்த புத்தகத்தில் விடுபட்டதாக நினைக்கும் நபர்கள் யாரும் உண்டா?
- .. (தங்களின் ஆலோசனைக்காக).
…
இந்த புத்தகம் வழியாக அல்லது தொடர்பாக தேடியதில் கண்டடைந்தவை
👉 Paula
Previous discussions this year

மகளிர் மட்டும்
February Reading..
February 25, 2025 · 4pm – 5:30pm

மூன்றாவது முள்
January Reading..
January 25, 2025 · 4pm – 5:30pm