முகப்புவாசிப்பவைவாசித்தவைவாசிக்கபரிந்துரைக்ககுழுவில் இணைய

வாசிக்கலாம் வாங்க!!

Hero Image@yoksel

“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கிறார் ஔவையார். (ஒருவர் எவ்வளவு தூரம் நூல்களை தேடி கற்று பரிச்சயமாக உள்ளாரோ. அவ்வளவு தூரம் அவரிடம் அறிவும் படைப்பாற்றலும் நிறைந்திருக்கும்.) உலகத்தின் வரலாறு, அரசியல், கலை, விஞ்ஞானம், கலாச்சாரம், இலக்கியம் போன்ற மரபுகள் பெருமைக்குரியன இவற்றினை படைக்கும் படைப்பாளிகள் சிறந்த வாசிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

உலகின் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினால் உருவானவர்களே. சிறந்த சிந்தனைகளையும் கற்பனை திறனையும் உருவாக்குவன சிறந்த புத்தகங்களே ஆகும். அப்படிப்பட்ட புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதற்கான வாய்ப்பாக இந்த குழு இயங்கும்