-
இலக்கற்ற பயணி – எஸ். ராமகிருஷ்ணன்
பயணம் – இந்த சொல்லே ஒரு மந்திரம் என தோன்றுகிறது. இதை கேட்டதும் தோன்றும் எண்ணங்கள் : எதிர்பார்ப்பு, தேடல், அறிதல், குதூகலம், நம்பிக்கை, இனம்புரியா அச்சம், தொலைதல் மற்றும் முக்கியமாக தப்பித்தல். எதிலிருந்து? நம்மிடமிருந்தே. நண்பர்களுடன், குடும்பத்துடன் கொள்ளும் பயணங்கள் வேறு வகை. அவை சிறந்தாலும், பயணத்திற்கான சிறந்த துணை நாம் மட்டுமே. நாம் நம்மை அறிய பயணம் போன்ற உதவி வேறில்லை என நினைக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் நம் வாழ்க்கை முறை, நாம் செய்யும்…
-
உயிர்ச்சுனை – சு.வேணுகோபால்
தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப்பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக்காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதைமாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும், குறைகளும், பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற அல்லது அடைய முயலுகிற மேன்மையைப்பற்றியதாக வேணுகோபால் அக்கறை…