உயிர்ச்சுனை – சு.வேணுகோபால்


தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப்பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக்காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதைமாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும், குறைகளும், பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற அல்லது அடைய முயலுகிற மேன்மையைப்பற்றியதாக வேணுகோபால் அக்கறை எப்போதும் இருக்கிறது. – க. மோகனரங்கன்

12 வெவ்வேறு கதைக்களத்தில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு “உயிர்ச்சுனை”. ஒவ்வொரு கதையுமே ஏற்படுத்தும் தாக்கங்களுமே தனித்துவமானவை.

வாழ்வின் அவலங்களை, அதை அனுபவிப்பர்களின் வலியை, வலியை தாண்டிய நம்பிக்கையை, நம்பிக்கையின் பலத்தை,

ஏமாற்றத்தின் உக்கிரத்தை நமக்குள் கடத்துவதில் சு. வேணுகோபால் இலகுவாக வெற்றி பெறுகிறார்.

பொதுவாக என் கதைகளின் உள் இழைகளின் நுட்பங்களை வாசகர்களுக்கு எப்போதுமே சொல்வதில்லை. தங்கள் வாசிப்பின் வழி வாசகர்களுக்கு உருவாகும் சித்திரத்தையும் அனுபவத்தையும் மதிக்கிறேன்.

சு. வேணுகோபால்

எனக்குள் உருவாகிய சித்திரவதைக்கும் சித்திரம் போலான இடங்கள்

ஒரு துளி துயரத்தில் ஒரு துளி விஷம் போலான விமலாவின் கேள்வி:

உள்ளத்தில் ஊறிய கற்பனை நிதர்சனத்தை எதிர்கொண்ட போது வெறும் வெற்றிடமாக கிடந்த்து. நான் நினைத்த மனிதனாக அவன் எப்படி உருமாற முடியும்? எனக்குள் குழந்தை மனம் ஏன் முகிழ்த்தது? 

மீதமிருக்கும் கோதும் காற்றில் சுகிர்தாவின்

மறுபடி ஒவ்வொருவனும் மேலே படுக்கும்போது யோனி உடலில் வெவ்வேறு இடங்களில் இருக்ககூடாதா என்றிருந்தது

புத்துயிர்ப்பு தரும் விசித்திர நம்பிக்கை

குழந்தை கொடும் பஞ்சப்பரப்பை கிழித்து கொண்டு எதிர்த்து நிற்பது போல் கை கால்களை அசைத்தது. அதனுடைய உதட்டோர சிரிப்பு கடவுளை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது. குழந்தை தெய்வத்தின் தெய்வம். அது ஒரு போதும் எந்த அதிர்ச்சியைக் கண்டும் பின்வாங்குவதில்லை 

வெண்ணிலை அறைந்து சொல்லும் உண்மை

நகரம் அவ்வப்போது தன் குணத்தை ஈவிரக்கமின்றி வெளிப்படுத்தி விடுகிறது

என்னை பார்த்து அவள் கும்பிட்டது உள்ளே கிடந்து குடைந்தது. அவள் கைகளில் இருந்த நடுக்கம் முள்ளாய்க் குத்த தொடங்கியது

தொப்புள் கொடி யில் கார்த்திகாவின் தாய் நினைவுகூரும் இடம் தரும் மரண வலி

பிள்ள மகராணி மாதிரியிருக்கா… 

பெறகு.. பரணியில இல்ல பொறந்திருக்கா? தரணி ஆள வேணாமா?

இலக்கிய ஒலி